ரெட்ரோ படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே தனது சொந்தக் குரலில் தமிழில் டப்பிங் பணியை மேற்கொண்டு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் நடிகை பூஜா ஹெக்டே புது முயற்சியாக தமிழில் டப்பிங் செய்வதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.