தமிழகத்தில் நிஃபா வைரஸ் குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னையில் B.N.Y.S., இளநிலை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்குவின் வீரிய தன்மையை கண்டறியும் ஆய்வகம் சென்னையில் அமைய உள்ளதாக கூறினார்.