தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், ஆற்றிலும் இல்லாமல் சேற்றிலும் இல்லாமல் நடுவே நின்று கொண்டிருக்கும் தேமுதிகவின் கூட்டணி கணக்கு, எங்கு போய் முடியும்? என்பது தான் தற்போது எல்லாருடைய கேள்வியாக இருக்கிறது. ஒரு சதவீதத்திற்கு கீழ் வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு, அங்கும், இங்கும் அண்ணியார் காட்டும் ஆட்டம், கடைசியில் எங்கு போய் முடியும்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. தேமுதிக யாருடன் கை கோர்க்க போகிறது?ஒரு சதவீதத்திற்கு கீழ் வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு துணை முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படும் OVER CONFIDENCE தேமுதிகவை தவிர வேறு யாருக்கும் வராது தான். ஒரு காலத்தில் முக்கிய அரசியல் கட்சியாக இருந்த தேமுதிக, சமீப காலமாக பிரதான கட்சிகளின் முதுகில் சவாரி செய்யும் நிலையில் தான் இருந்து வருகிறது. அப்படி இருக்கையில், தேமுதிக யாருடன் கை கோர்க்க போகிறது? என்பது குழப்பத்திலேயே நீடித்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக, வருகிற தேர்தலிலும் அதே கூட்டணியில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாருடன் கூட்டணி என்பது குறித்து ஜனவரியில் அறிவிக்கப்படும் என்றார் பிரேமலதா. ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடந்த கட்சி மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநாடு முடிந்து 2 வாரத்திற்கு மேல் ஆகியும், இன்னும் கூட்டணியை அறிவிக்காமல் சஸ்பென்ஸிலேயே வைத்திருக்கிறார். ராஜ்யசபா சீட்டும் வேண்டும்...அதிமுக, திமுக என இரு தரப்பும் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தின. அதிமுக தரப்பில் 6 தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்க தயார் என்ற நிலையில், இரட்டை இலக்கத்தில் சீட்டு வேண்டும் என விடாப்பிடியாக இருக்கும் பிரேமலதா, ராஜ்யசபா சீட்டும் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் திமுகவோடும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் பிரேமலதாவின் நடவடிக்கை, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அப்செட்டை கொடுக்கவே, தேமுதிகவை விலக்கி விட்டு விடலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக சொல்கிறார்கள். மோடியின் விசிட்டுக்குள்ளாக கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என்று தான் பியூஷ் கோயல் ஒரு வாரமாக தமிழகத்தில் முகாமிட்டு இருந்தார். ஆனால், கடைசி வரைக்கும் தேமுதிக ஒப்புக் கொள்ளாததால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிகவுக்கான கதவை சாத்த முடிவு செய்திருக்கிறார்களாம்.முதல் தேர்தலிலேயே மாநில கட்சி அந்தஸ்துதேமுதிக உடன் இன்னும் கூட்டணி இறுதி செய்யப்படாததால், மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட பேனரில் தேமுதிக விடுபட்டு போயிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி பக்கம் செல்ல வாய்ப்பு இல்லை என்றால், தேமுதிகவுக்கு இருக்கும் திமுக, த.வெ.க. என இரண்டு வாய்ப்புகள் தான் இருக்கின்றன. திமுகவில் ஏற்கனவே கூட்டணி கட்சிகள் வரிசை கட்டி நிற்கும் போது தேமுதிக எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான் என்பதால், பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 2006 சட்டமன்ற தேர்தலை ஒட்டி கட்சியை ஆரம்பித்த விஜயகாந்த், முதல் தேர்தலிலேயே 8.3 சதவீதம் வாக்கு வங்கியை உருவாக்கி ஆச்சரியப்படுத்தினார்.முதல் தேர்தலிலேயே மாநில கட்சி அந்தஸ்து கிடைத்தது. தேமுதிகவுக்கு பலத்த அடி விழுந்ததுதொடர்ந்து, 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிட்ட தேமுதிக, வாக்கு வங்கியை 10 சதவீதமாக உயர்த்தியது. 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு சென்ற விஜயகாந்த், திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் செய்தாலும் தேமுதிகவின் வாக்கு வங்கி என்னமோ சரிவை தான் சந்தித்தது. 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவர் ஆனாலும், வாக்கு சதவீதம் 7.9% ஆக சரிந்தது. ஆனாலும், விஜயகாந்த் மீதான டிமாண்ட் மட்டும் குறையவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி விஜயகாந்தை அரவணைத்துக் கொண்டது. 14 தொகுதிகளோடு கூட்டணியின் பெரிய கட்சி என்ற பெருமையில் போட்டியிட்டாலும், வாக்கு வங்கி இன்னும் சரிந்து 5.2 சதவீதமாக குறைந்து, வெற்றி வாய்ப்பும் கிடைக்காமல் போனது. அதற்கு பிறகு மக்கள் நல கூட்டணி உருவாகி 2016ல் தேமுதிகவுக்கு பலத்த அடி விழுந்தது தான் மிச்சம். தேமுதிகவின் வாக்கு வங்கி 2.4% ஆக சரிந்தது. ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லைஅதற்கு பிறகு 2019 தேர்தலில் மீண்டும் NDA கூட்டணிக்குள் சென்ற தேமுதிகவுக்கு அதை விட பெரிய அடியாக வாக்கு வங்கி 2.2% ஆக சரிந்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் ஒத்து வராததால் டிடிவியுடன் கை கோர்த்தது தேமுதிக. 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிகவின் வாக்கு வங்கி 1 சதவீதத்திற்கு கீழாக குறைந்தது பின்னடைவை சந்தித்தது. தேமுதிகவுக்கு கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. இப்படி ஒரு டிராக் ரெக்கார்டை வைத்துக் கொண்டு தான் சளைக்காமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறார் பிரேமலதா.தேமுதிகவின் அடுத்த அரசியல் எதிர்காலமே...கட்சியை காப்பாற்ற எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் தேமுதிகவுக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், ஆளுங்கட்சியான திமுகவோடும் இணக்கம், எதிர்க்கட்சியோடும் இணக்கம், அவ்வப்போது விஜய்யுடனும் நட்பு என குழப்பத்திலேயே வண்டியை ஓட்டிக் கொண்டிருப்பது எப்படி கை கொடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கூட்டணி முடிவில் தப்பு கணக்கு போட்டு தான் தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்தது என்ற நிலையில், தற்போது பிரேமலதா என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்து தான் தேமுதிகவின் அடுத்த அரசியல் எதிர்காலமே அடங்கியிருக்கிறது. Related Link NDA கூட்டம் சொல்லும் சேதி என்ன?