இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று மொரீஷியஸ் சென்றடைந்தார். மொரீஷியஸ் நாட்டின் 57ஆவது தேசிய தின கொண்டாட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும்படி பிரதமர் மோடிக்கு, மொரீஷியஸ் அதிபர் நவின்சந்திர ராம்கூலம் (( Navinchandra Ramgoolam)) அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்று இன்று மொரீஷியஸ் செல்லும் பிரதமர் மோடி, தேசிய தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் இந்திய பாதுகாப்புப் படைகளும் பங்கேற்க உள்ளன.மொரீஷியஸின் மக்கள்தொகையில் இந்திய வம்சாவளியினர் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.