மத்திய பட்ஜெட்டை ஒரு மக்கள் பட்ஜெட் என வர்ணித்துள்ள பிரதமர் மோடி, அதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பட்ஜெட் தயாரிப்பு குழுவினருக்கும் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டால், சேமிப்பு அதிகரித்து, முதலீடுகள் மற்றும் நுகர்வுத் தன்மை அதிகரிக்கும் என மோடி தெரிவித்துள்ளார். அதற்கான பல வழிமுறைகள் மத்திய பட்ஜெட்டில் அடங்கி உள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.