மிக இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குகேஷ் பெற்ற வெற்றியால் தமிழ்நாடே பெருமை கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்தியுள்ளார்.