குவைத் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் மிக உயரிய விருதான ‘The Order of Mubarak Al Kabeer வழங்கி கவுரவிக்கப்பட்டது. இது ஒருவித மாவீரர் விருதாக வெளிநாட்டு அரசுத் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்பத்தினருக்கு குவைத் மன்னரால் வழங்கப்படுகிறது. குவைத் அமீர் Sheikh Meshal Al-Ahmad Al-Jaber Al Sabah மோடிக்கு இந்த விருதை வழங்கினார்.இதற்கு முன்னர் இந்த விருது முன்னாள் அமெரிக்க அதிபர்கள் பில் கிளின்டன், ஜார்ஜ் புஷ், பிரிட்டன் இளவரசராக இருந்த சார்லஸ் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது. மோடியை பொறுத்தவரை இது அவருக்கு கிடைக்கும் 20 ஆவது சர்வதேச விருதாகும்.