மூன்று நாள் பயணமாக தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.ஜி20 மாநாட்டில் பங்கேற்று மூன்று அமர்வுகளிலும் உரையாற்ற இருப்பதாக தகவல்.ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்கில் நடக்கிறது21ஆம் முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் 3 அமர்வுகளிலும், பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி குறித்துப் பேசுகிறார்பிரதமர் மோடி பயணம் - காங்கிரஸ் சாடல்...அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்ளவில்லை என்று தெரிந்தவுடன், மிகவும் தைரியமாகவும், பாதுகாப்பாகவும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மோடி, தென்னாப்பிரிக்கா சென்றிருப்பதாக விமர்சனம்.டிரம்ப் பங்கேற்ற கோலாலம்பூர் ஆசியான் மாநாட்டிற்கு பிரதமர் மோடி செல்லாததை இணைத்து சுட்டிக்காட்டி காங்கிரஸ் சாடல்.