மதுரை சித்திரை திருவிழாவில் அன்னாதானம், நீர் மோர் வழங்குபவர்கள் செயற்கை சாயத்தை சேர்க்கக்கூடாது எனவும் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அன்னதானம் வழங்க முடியும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரையில் வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 16 ஆம் தேதி வரை சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. அப்போது, அன்னதானம், மற்றும் நீர் மோர் வழங்குபவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்களை பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்னதானம் வழங்குபவர்கள் இணைய வழியில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.