அல்லு அர்ஜுன் நடித்து திரையரங்குகளில் வெளியாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் 5 நாட்களில் 922 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியில் மட்டும் 339 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய சினிமாவில் அதிவேகமாக 922 கோடி ரூபாய் வசூல் எட்டிய திரைப்படம் என்ற சாதனையும் படைத்துள்ளது.