வியாபாரியை பிடித்து, காவல் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த போலீஸ். ஜீப்பில் இருந்து இழுத்து கீழே தள்ளி வியாபாரியை அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டிய இருவர். வியாபாரி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழப்பு. வியாபாரி கொலை செய்யப்பட்டது ஏன்? காவல் நிலையத்திற்கு முன்பு நடந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன? தனகல்லு காவல் நிலையத்துக்கு ஈஸ்வரப்பா-ங்குற நபர ஜீப்ல கூப்டு போய்ருக்காங்க போலீஸ். அப்ப அந்த ஜீப்ப சுத்தி வளைச்ச ஹரி, செல்லப்பான்னு ரெண்டு பேரும், அந்த இளைஞர தரதரன்னு வெளியில இழுத்துப் போட்டு சரமாரியா தாக்கிருக்காங்க. தடுக்க வந்த போலீசாரையும் தாக்குன அந்த ரெண்டு பேர் மறைச்சு வச்சுருந்த அரிவாள், கத்திய எடுத்து ஈஸ்வரப்பாவோட கை, கால், முகம்ன்னு எல்லா இடங்களையும் சரமாரியா வெட்டிருக்காங்க. இதுல சம்பவ இடத்துலையே சுருண்டு விழுந்த அவரு துடிதுடிக்க உயிரிழந்துட்டாரு. ஈஸ்வரப்பா உயிரிழந்தத தெரிஞ்சுக்கிட்ட ரெண்டு பேரும் அங்கருந்து தப்பிச்சு ஓடப் பாத்துருக்காங்க. ஆனா அவங்கள சம்பவ இடத்துலையே சுத்தி வளைச்சு பிடிச்ச போலீஸ், ஹரி கிடட்டயும், செல்லப்பா கிட்டயும் விசாரணையில இறங்குனாங்க... அதுல தான் இந்த கொலை எதனால நடந்துச்சு, இதுக்கு மூலக்காரணம் என்ன அப்படின்னு எல்லாம் தெரியவந்துச்சு.ஆந்திராவுல உள்ள ராகினேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஹரிக்கும் - அதே பகுதிய சேந்த பெண் ஒருத்தங்களுக்கும் சில வருஷங்களுக்கு முன்னாடி கல்யாணமாகிருக்கு. இந்த தம்பதிக்கு இப்ப வர குழந்தை இல்லன்னு கூறப்படுது. ஹரி பக்கத்துல உள்ள கம்பெனியில வேலை பாத்துட்டு இருந்துருக்காரு. வார விடுமுறை நாட்கள்ல மனைவிய பல இடங்களுக்கு கூப்டு போய்ட்டு, மகிழ்ச்சியாவும் வாழ்ந்துட்டு இருந்தாரு ஹரி. இதுக்கிடையில ஹரியோட மனைவிக்கும் அதே பகுதிய சேந்த வியாபாரி ஈஸ்வரப்பா-ங்குற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கு. நார்மலா பேச ஆரம்பிச்ச ரெண்டு பேரும், அதுக்கப்புறம் ஃபோன் நம்பர பரிமாறிக்கிட்டு எந்நேரமும் ஃபோன்லையே மூழ்கிப் போய் கிடந்துருக்காங்க. இதுவே அவங்களுக்குள்ள தகாத உறவாவும் மாறிருக்கு. கணவன் வேலைக்கு போனதுக்கு அப்புறம் ஈஸ்வரப்பாவ அடிக்கடி வீட்டுக்கு கூப்டுற அந்த பெண், அவரு கூட தனிமையிலையும் இருந்துருக்காங்க.அதே மாதிரி அடிக்கடி ஈஸ்வரப்பா கூட ஊர் சுத்திட்டும் இருந்துருக்காங்க. மனைவியோட நடவடிக்கையில ஏற்பட்ட மாற்றத்த தெரிஞ்சுக்கிட்ட ஹரி, அவங்கள கண்காணிக்க ஆரம்பிச்சுருக்காங்க. அடுத்து அவங்களோட ஃபோன எடுத்து வாட்ஸ் அப், இன்ஸ்டா, முகநூல்ன்னு எல்லாத்தையும் பாத்துருக்காரு. அதுல மனைவி, ஈஸ்வரப்பா கூட கொஞ்சுக் குழாவி பேசிருந்த மெஸேஜ்கள் இருந்துருக்கு. இதுபாத்து அதிர்ச்சியடைஞ்ச, ஹரி மனைவிய போட்டு சரமாரியா அடிச்சுருக்காரு. அடுத்து அவங்களோட செல்போன் போட்டு உடைச்ச ஹரி, மனைவிய ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிட்டாரு. இதனால ஈஸ்வரப்பாவ பாக்க முடியாமலும், பேச முடியாமலும் அந்த பெண் தவிச்சுருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி கணவன் வேலைக்கு போனதுக்கு அப்புறம் பக்கத்து வீட்டுல இருந்த பெண் கிட்ட இருந்து ஃபோன வாங்குன ஹரியோட மனைவி தன்னோட காதலனுக்கு ஃபோன் பண்ணி, என் கணவருக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சுருச்சு, அவன் என்ன வீட்ட விட்டு வெளியில அனுப்ப மாட்டா-ங்குறான், தயவு செஞ்சு என்ன எங்கையாது கூப்டுட்டு போய்ருங்கன்னு சொல்லி அழுதுருக்காங்க.அதுபடி ரெண்டு பேரும் வீட்ட விட்டு ஓடிப்போய்ட்டாங்க. அன்னைக்கு நைட்டு வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு திரும்புன கணவன், மனைவி வீட்ல இல்லாதத பாத்து அதிர்ச்சியடைஞ்சுருக்காரு. அடுத்து மனைவிய காணும்ன்னு காவல் நிலையத்துல புகார் அளிச்சுட்டாரு. இதனால போலீஸ் ஈஸ்வரப்பாவையும், ஹரியோட மனைவியவும் பல இடங்கள்ல தேடி அலைச்சுருக்காங்க. ஈஸ்வரப்பாவோட செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணி பாத்துருக்காங்க. அப்ப செல்போன் சிக்னல் நெல்லுர் பகுதியில காட்டிருக்கு. இதனால போலீசார் நேரா சிக்னல் காட்டுன பகுதிக்கு போய், ரெண்டு பேரையும் கையும் களவுமா பிடிச்சு போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்டு வந்தாங்க.இத தெரிஞ்சுக்கிட்ட ஹரியும் அவரோட அண்ணன் செல்லப்பாவும் காவல் நிலையத்து வாசல்ல உள்ள மறைவான இடத்துல ஒழிஞ்சுட்டு இருந்தாங்க. அந்த நேரத்துல ஜீப் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தத பாத்த ரெண்டு பேரும் வண்டிக்குள்ள இருந்து ஈஸ்வரப்பாவ கீழ இழுத்துப் போட்டு அரிவாள், கத்தியால கொடூரமா வெட்டிருக்காங்க. இத பாத்து பயந்துபோன ஹரியோட மனைவி அங்கருந்து ஓடிப்போய்ட்டாங்க. அந்த நேரத்துலஹரி மற்றும், செல்லப்பாவை சுத்தி வளைச்சு பிடிச்ச போலீஸ், ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.