மத்திய பட்ஜெட் தயாரிப்பு குழுவில் பட்டியலினத்தவரும், பழங்குடியினரும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுக்களில் விளிம்பு நிலை மக்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என சாடினார்.