ஜம்மு காஷ்மீரின் ரஜோரி (( Rajouri )) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை கொட்டி தீர்த்தது. திடீரென கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். குறிப்பாக சாலை முழுவதும் ஆலங்கட்டி மழையால் ஐஸ் கட்டிகள் நிறைந்து காணப்பட்டன. கனமழையும், ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.