25 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆக உள்ள படையப்பா திரைப்படத்தை காண 30 லட்சம் ரூபாய் அளவுக்கு டிக்கெட்டுகள் முன்பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படம் ப்ளாக் பிளஸ்டர் வெற்றி பெற்றது. இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி படம் ரீ- ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படையப்பா- நீலாம்பரி சண்டையை மீண்டும் திரையில் காண ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.