ரம்ஜான் பண்டிகையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்தனர். குறிப்பாக, சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை செய்தனர். மேலும் கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்து வழிபாடு நடத்தினர்.