ரம்ஜான் கொண்டாட்டத்திற்கு தயாராகும் இந்தோனேசியா நாட்டு மக்கள், தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஜகார்த்தாவிலிருந்து ஒரு வழி போக்குவரத்திற்காக நியமிக்கப்பட்ட சிகாம்பெக்கில் ((Cikampek)) உள்ள ஒரு சுங்கச்சாவடியில் ஆயிரக்கணக்கான கார்கள் வரிசையில் நின்று சென்றன. ஜகார்த்தாவின் பசார் செனென் ரயில் நிலையம், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரயில் பயணங்களில் 10 சதவீதம் அதிகரிப்பைக் கண்டுள்ளதாக இந்தோனேசியாவின் தேசிய ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.