ரஞ்சி கோப்பை தொடரில் நாளை நடைபெறும் ரெயில்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஆயுஸ் பதோனி தலைமையிலான டெல்லி அணிக்காக களமிறங்குகிறார். இந்நிலையில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் கோலி, டெல்லி அணி வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டு வரும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது