காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நொண்டியடித்தபடி பங்கேற்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. விக்கி கவுசலுடன் ராஷ்மிகா நடித்துள்ள சாவா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராஷ்மிகா, விக்கி கவுசல் உதவியுடன் நொண்டியபடி மேடையேறினார்.