கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 8-ந்தேதி நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சேர்ந்த 8 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் நிபந்தனை அடிப்படையில் 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.