மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து, உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். ராமேஸ்வரம் மக்களை கண்டுகொள்ளாமல் இலங்கைக்கு உதவி செய்வதாக அறிவிப்பதா? என்றும், 2 - 3 நாட்களாக அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் தவிக்கும் ராமேஸ்வரம் நகர மக்களை முதலமைச்சர் நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்றும் இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். ராமேஸ்வரம் மக்களை கண்டுகொள்ளாமல் இலங்கைக்கு உதவி செய்வதாக முதலமைச்சர் அறிவிக்கிறார் ராமேஸ்வரம் நகர மக்கள் 2 - 3 நாட்களாக அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் தவிப்பு மழைக்காலத்தில் கன்ட்ரோல் ரூமில் அமர்ந்து ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் நேரில் சென்று சந்திக்க வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தல் முதலமைச்சர் நேரில் சென்றால் தான் நிவாரண நடவடிக்கைகள் உடனடியாக நடைபெறும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்