அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க கோரி தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி எம்பி தலைமையிலான 15 உறுப்பினர்கள் இத்தீர்மானத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கொண்டு வந்தனர். இத்தீர்மானத்துக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.