அதிமுக பொதுக்குழுவில் உறுப்பினர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது, குறிப்பிட்ட சிலரை தவிர மற்றவர்கள் மைக்கில் பேச வாய்ப்பில்லை எனத் தகவல்,வழக்கமாக பொதுக்குழுவில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம், செய்தியாளர்களுக்கும் பொதுக்குழு கூட்டத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது,2022, 2023 பொதுக்குழு முழுமையாக செய்தி சேகரிக்க அனுமதி அளிக்கப்பட்டது, கடந்த முறை நடந்த சச்சரவுகள் அனைத்தும் ஊடகங்களில் செய்தியாக்கப்பட்டது.2022-ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவிலும் தேவையற்ற சர்ச்சைகள் வெடித்தது.