புலம்பெயர்ந்தவர்கள் சென்ற விமானத்தை தரையிறங்க அனுமதிக்காத கொலம்பியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். கொலம்பியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக உயர்த்தப்படும் எனவும், கொலம்பியா அரசாங்க அதிகாரிகள் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு விசா ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.