இந்தியாவில் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்க்கும் நல் உள்ளங்களுக்கு வழங்கப்படும் வெகுமதி தொகையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதுவரை 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 25 ஆயிரமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார்.