விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் தற்காலிக தார்ச்சலை அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நள்ளி கிராமத்தில் உள்ள மெயின் சாலையில் புதிய தரைப்பாலம் கட்டப்பட்டுவருவதால், போக்குவரத்திற்காக தற்காலிகமாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.