ஜம்மு காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படும் நிலையில், மலைகள், வீடுகள் ஆகியவை பனிப்போர்வை போர்த்தியது போன்று காட்சி அளிக்கின்றன. மழை போல் கொட்டும் பனியால், அனைத்து பகுதிகளும் வெண்பனியால் சூழப்பட்டுள்ளன. பார்க்கவே ரம்மியமாக காட்சி அளித்தாலும், சாலைகள், வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை பனி ஆக்கிரமித்துள்ளன.