அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் சரிந்து வரலாறு காணாத வகையில் 84.73ஆக குறைந்தது. டாலருக்கு பதிலாக வேறு கரன்சியை பயன்படுத்துவது குறித்து பிரிக்ஸ் நாடுகள் நடத்திய ஆலோசனைக்கு எதிர் வினையாற்றிய டிரம்ப், அவ்வாறு செய்தால் 100சதவீதம் வரி விதிப்பை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்தார். இதனைஅடுத்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது