தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா 12 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். இதற்கிடையே 2023ஆம் ஆண்டு தான் "திரலாலா மூவிங் பிக்சர்ஸ்" என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதாக சமந்தா அறிவிப்பை வெளியிட்டிருந்தார். தனது "திரலாலா மூவிங் பிக்சர்ஸ்" தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அர்த்தமுள்ள, ஆதாரபூர்வமான, சர்வதேச அளவில் விரும்பக்கூடிய படங்கள் உருவாக்கப்படும் என்று சமந்தா கூறியிருந்தார்.இந்நிலையில் கருத்தரங்கு ஒன்றில் "பங்காரம்" படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டி பங்கேற்று பேசினார். அப்போது, "தயாரிப்பாளராக நடிகை சமந்தா தனது முதல் படத்திற்கு பாலின பாகுபாடு இல்லாமல் சம்பளம் வழங்கியுள்ளார்.மாற்றம் என்பது எப்போதும் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்கு ஏற்ப நடிகை சமந்தா, தற்போது சம்பள விஷயத்தில் அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார். என்னைப் பொறுத்தளவில் இந்தியாவிலேயே முதன்முறையாக இதுபோன்ற சம்பவம் நடப்பதாக கருதுகிறேன் என்றும், சினிமா துறையில் பெண் இயக்குநர்களுக்கு அதிக சவால்கள் உள்ளன. அவர்கள் ஆண் இயக்குநர்களை விடவும் மிக அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது" என்று தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர், “ஆண் இயக்குநர்கள் நான்கு ஆண்டுகளில் சாதிப்பதை பெண் இயக்குநர்கள் சாதிப்பதற்கு எட்டு ஆண்டுகளாகவது ஆகும். சம்பள பாகுபாடு என்பது பெண் இயக்குநர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைசினிமாவில் சம்பளம் என்பது ஹீரோக்களை காட்டிலும் ஹீரோயின்களுக்கு மிகவும் குறைவு தான் என்பதால் அதை முறைப்படுத்த அதிரடி முடிவு எடுத்துள்ளார் சமந்தா” " என்றும் தெரிவித்தார்.பாலின பாகுபாடின்றி தயாரிப்பாளராக நடிகை சமந்தா ஊதியம் வழங்குவது பாராட்டை பெற்று வருகிறது.இதையும் படியுங்கள் : நகர வாழ்க்கையில் இருந்து ஒரு பிரேக்.. தூங்குவதற்காகவே சுற்றுலா செல்லும் இளம் தலைமுறை