திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு, ஒன்பதாம் நாளில் அம்மன் மர குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் ஆதி மாரியம்மன் கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மர குதிரை வாகனத்தில் சென்ற அம்மனுக்கு, வழிநெடுகிலும் 20க்கும் மேற்பட்ட மண்டகப்படி செய்யப்பட்டு, ஏராளமான பெண்கள் வழிபாடு செய்தனர். முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.