பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் சம்யுக்தா. இவர் விவாகரத்து ஆனவர் என்றும், மகனை தனியாக வளர்த்து வருவதாகவும் அந்த ஷோவிலேயே கூறி இருந்தார். இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா, சமீபத்தில் ஒரு நபர் உடன் ஜோடியாக எல்லோருக்கும் பார்ட்டி கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு இருந்தார்.அதனால் அவருக்கு இரண்டாம் திருமணமா என எல்லோரும் கேட்டு வந்தனர். சமீபத்தில் இது பற்றி சம்யுக்தா பேட்டியில் அவரை இரண்டாம் திருமணம் செய்ய இருப்பதை அறிவித்து இருந்தார். இந்நிலையில், சம்யுக்தா - அனிருத்தாவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. ஸ்ரீகாந்த் இல்லத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.இது தொடர்பான போட்டோஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.பிரபல கிரிக்கெட் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்தின் மகன் அனிருதா ஸ்ரீகாந்த் என்பவரை தான் சம்யுக்தா திருமணம் செய்துள்ளார். அனிருதாவும் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் தான். அவர் சிஎஸ்கே அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.