பாமக தலைவர் அன்புமணியின் மகள் சங்கமித்ரா நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். சங்கமித்ரா தயாரிப்பில் உருவாகி வரும் அலங்கு என்ற திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக ரஜினியை சந்தித்து சங்கமித்ரா வாழ்த்து பெற்றார். கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி குழுவுக்கும் தமிழக பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் திரைப்படத்தின் மையம் என்றும் அதன் அடிப்படையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.