ரிசர்வ் வங்கியின் 26ஆவது கவர்னராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்றுக் கொண்டார். ரிசர்வ் வங்கி தலைமையகத்திற்கு வந்த அவரை வங்கியின் துணை கவர்னர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் மலர்க்கொத்து அளித்து வரவேற்றனர். கவர்னர் சுப்பாராவுக்குப் பிறகு நிதி அமைச்சகத்தில் இருந்து நேரடியாக ரிசர்வ் வங்கிக்கு வரும் இரண்டாவது கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ஆவார்.