ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு தலைவராக பாஜக எம்.பி. பிபி சவுத்ரியை நியமித்துள்ளதாக நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது. இந்த குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், பர்ஷோத்தம் ரூபாலா, மணீஷ் திவாரி மற்றும் பிரியங்கா காந்தி , பன்சூரி ஸ்வராஜ், சம்பித் பத்ரா உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.