இருக்கை மாற்றத்திற்கு பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்கும் ஓபிஎஸ்.சட்டப்பேரவைக்கு வந்தாலும் கூட்ட அரங்கிற்குள் செல்லாத ஓபிஎஸ்.கடந்த பிப்ரவரியில் ஓபிஎஸ்-ன் இருக்கை 2- ம் வரிசைக்கு மாற்றப்பட்டது. அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் சட்டப்பேரவை அரங்கிற்குள் செல்வதில்லை.ஜூன் மாதத்தில் கூட வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டு சென்றார் ஓபிஎஸ்.இன்றும் சட்டப்பேரவை வந்த ஓபிஎஸ் கூட்ட அரங்கிற்குள் செல்லவில்லை.அவைக்கு உள்ளே வராமல் சபாநாயகர் அறையில் அமர்ந்து விட்டு திரும்பி சென்றார்.