பராசக்தி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்ததற்கு நடிகர் ரவி மோகனுக்கு சிவகார்த்திகேயன் நன்றியை தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற பராசக்தி திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், வெற்றிகரமான கதாநாயகன், வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதை ஏற்றுக் கொள்வது சற்று சிரமமாக உள்ளதாக கூறினார். 1960 காலகட்டங்களில் இருந்த குடும்ப உறவு, அண்ணன், தம்பி பாசம் குறித்து பராசக்தி திரைப்படம் பேசும் என்று இயக்குநர் சுதா கொங்கரா கூறினார். பராசக்தியில் தனக்கு முக்கிய பங்கு இல்லை என்றும், திரைப்படம் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்ததாகவும் கூறினார். VINTAGE காலகட்டத்தில் பயன்படுத்திய பல விஷயங்கள் பராசக்தியில் பயன்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.பராசக்தி திரைப்படம் குறித்து தனக்கு நிறைய யோசனை இருந்ததாகவும், தம்மை இணைத்தற்கு இயக்குநர் சுதா கொங்கராவுக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் ரவி மோகன் கூறினார். திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கும், தனக்கும் நிறைய சண்டை காட்சிகள் உள்ளதாகவும், SK எந்த மோதலும் இல்லாமல் சௌகரியமாக நடித்திருப்பதாகவும் ரவி மோகன் கூறினார்.