news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழ்நாட்டில் இருந்து ஆறு ராஜ்யசபா எம்பிக்கள்
tv

Also Watch

தமிழ்நாட்டில் இருந்து ஆறு ராஜ்யசபா எம்பிக்கள்

ராமதாஸ் உதவியாளர் மனு தள்ளுபடி

75

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில், மாநிலங்களவைத் தேர்தலுக்காக வழங்கப்பட்ட 6 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபா எம்பிக்கள்
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரது பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து, தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

தமிழகத்தில் ஆறு பேர் யார் யார்?
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆறு இடங்களில் அதிமுக சார்பில் தம்பிதுரையும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் அன்புமணியும் வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கூட்டணி ஒதுக்கீட்டில், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதனும் ஒரு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை
மாநிலங்களவைத் தேர்தலுக்கான இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று மார்ச் 6ஆம் தேதி நடைபெற்றது. இதில்,
திமுகவின் திருச்சி சிவா
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
காங். கிறிஸ்டோபர் திலக்
தேமுதிகவின் எல்.கே.சுதீஷ்

அதிமுகவின் தம்பிதுரை
பாமகவின் அன்புமணி
ஆகிய 6 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததாலும் வேட்புமனுவை முழுமையாக நிரப்பாததாலும் சுயேச்சையாகப் போட்டியிட்ட ராமதாஸ் உதவியாளர் சுவாமிநாதனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.


போட்டியின்றி தேர்வு
இந்த நிலையில், வேறு யாரும் போட்டியிடாததால் இந்த 6 பேரும் தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Related Link
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 14 முக்கிய அறிவிப்புகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 14 முக்கிய அறிவிப்புகள்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசியலில் களமிறங்கும் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved