அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 70 பந்துகளில் சதம் விளாசிய இந்திய மகளிரணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதன் மூலம் ஹர்மன்பிரீத் கவுரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 87 பந்துகளில் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்திருந்தது, அதிவேக சதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.