உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், இதுவரை 11 கோடி பேர் புனித நீராடியுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. கடந்த 13 ஆம் தேதி முதல் மகா கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில், திரிவேணி சங்கமம் அமைந்துள்ள பகுதி விளக்கொளியில் ஜொலிக்கிறது.