பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ள தனது பாடல்களை நீக்கக் கோரி, இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான பாடல்களை மக்கள் தற்போது கேட்டு ரசிப்பதனால், இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார் என கேள்வி எழுப்பிய நீதிபதி என்.செந்தில்குமார், பழைய பாடல்களை பயன்படுத்துவது தற்போது ட்ரெண்டாகி வருவதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மனு மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.