நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மிகவும் களைப்புடன் காணப்பட்டார் எனவும், நீண்ட உரையை அவர் வாசித்ததை பார்க்க பாவமாக இருந்ததாகவும் சோனியா காந்தி கருத்து தெரிவித்தது பேசுபொருளாகியுள்ளது. குடியரசுத் தலைவர் உரை முடிந்ததும் அது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு பதிலளித்தார்.