தெலங்கானா... உடல்நிலை சரியில்லாததால் வேலையில் இருந்து பாதியில் வீடு திரும்பிய கணவன். வீட்டின் கதவை திறந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி. பாய் பெஸ்டியுடன் மனைவி தனிமையில் இருந்ததை கண்டு கொந்தளித்த கணவன். காலில் விழுந்து கதறி அழுது கொண்டே காலை வாரிய கொடூர மனைவி. துடிக்க துடிக்க கழுத்தை நெரித்து கொன்று விட்டு கபட நாடகம். யாருக்கும் சந்தேகம் வராதபடி அழுது புரண்டு நாடகமாடியும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? வீட்டு வாசல்ல நின்னு, ஒரு பெண் கத்திக் கதறிட்டு இருந்துருக்காங்க. என்னையும், பிள்ளைகளையும் இப்படி தனியா விட்டுட்டு போய்ட்டிங்களேன்னு, மனைவி ஸ்ரீருதிலயா அழுதுட்டு இருந்துருக்காங்க. சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு காரங்களாம் வந்து பாத்தப்ப, வீட்டு பின்னாடி இருந்த ஸ்லாப் கொக்கில தூக்குல தொங்கிட்டு இருந்துருக்காரு கணவன் ஹரிநாத். விஷயம் தெரிஞ்சு கொஞ்ச நேரத்துலேயே சொந்தக்காரங்கலாம் அங்க வந்துட்டாங்க. என்னாச்சுன்னு மனைவி ஸ்ரீருதிலயாக்கிட்ட விசாரிச்சப்ப, வழக்கம்போல நைட்டு குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தாரு, ரெண்டு பொம்பள பிள்ளைங்கள கரை சேக்கனும்னு கொஞ்சமாச்சு அக்கறை இருக்கான்னு கேட்டு சத்தம் போட்டேன், அப்படியே சண்ட பெருசாகியிருச்சு, அந்த கோவத்துலதான் இப்படி பண்ணிட்டாருன்னு அழுதுட்டே சொல்லியிருக்காங்க.ஆனது ஆகிப்போச்சு, போலீஸ் கேஸ்னு ஆகுறதுக்குள்ள நாமளே இறுதிச்சடங்கு பண்ணி முடிச்சிருவோம்னு சொந்தக்காரங்க எல்லாரும் சேந்து முடிவு பண்ணிருக்காங்க. ஹரிநாத்தோட சடலத்த மறுநாள் சொந்தக்காரங்கலாம் சேந்து இறுதிச்சடங்கு பண்ணி, சடலத்த எரிச்சிருக்காங்க. ரெண்டு நாளைக்கு அப்புறம், ஹரிநாதோட பெரியப்பா மகன், ஸ்ரீருதிலயாக்கிட்ட போய், அண்ணனோட இறுதிச்சடங்குக்கு ஆன செலவெல்லாம் கொடுங்க, அந்த நேரத்துல உங்க கிட்ட கேக்கக் கூடாதுன்னு நான் தான் எல்லா பணத்தையும் செட்டில் பண்ணிருக்கேன், அதுவும் கடன் வாங்கி தான் பண்ணேன், இப்ப நீங்க பணத்த கொடுத்தா தான் அத கடன் கொடுத்தவங்க கிட்ட கொடுத்து கணக்கு வழக்க முடிக்க முடியும்னு சொல்லியிருக்காரு. அதுக்கு, என் கிட்ட இப்ப ஒத்த பைசா கூட இல்ல, உங்க அண்ணன் உயிரோட இருந்ததப்பவே எல்லாத்தையும் குடிச்சு குடிச்சே அழிச்சிட்டாருன்னு சொல்லியிருக்காங்க ஸ்ரீருதிலயா.அப்ப, கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான், பூர்விக சொத்த வித்து, எங்க சித்தப்பா, அதாவது ஹரிநாத்தோட அப்பா, அண்ணன் பேங்க் அக்கவுண்ட்ல 8 லட்சம் ரூபாய் பணம் போட்டு விட்டார்ல, அதுல இருந்து எடுத்துக் கொடுங்கனு கேட்ருக்காரு. ஏன்னா, பூர்வீக சொத்த வித்து ஹரிநாத்துக்கு அவங்க அப்பா காசு கொடுத்த விஷயம் சொந்தக்காரங்க எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம்தான். அதுல இருந்த பணத்த கேட்டப்பவும், ஸ்ரீருதிலயா, அதையும் ஹரிநாத் எடுத்து காலி பண்ணிட்டாருன்னு சொல்லியிருக்காங்க. உடனே கடுப்பான ஹரிநாத்தோட பெரியப்பா மகன், போலீஸ் ஸ்டேஷனுக்கு போய், எங்க அண்ணன் உடம்பு சரியில்லாம இறந்து போய்ட்டான், இறுதிச்சடங்குக்கு நான் தான் எல்லா செலவும் பண்ணேன், இப்ப எங்க அண்ணி பணத்த வச்சிக்கிட்டே ஏமாத்துறாங்க, கொஞ்சம் பேசி பணத்த மட்டும் வாங்கிக் கொடுங்கன்னு கேட்டுருக்காரு. அதன் அடிப்படையில, ரெண்டு போலீஸ்காரங்க, ஸ்ரீருதிலயாக்கிட்ட விசாரிக்க போய்ருக்காங்க.போலீஸ பாத்ததுமே ஸ்ரீருதிலயாக்கு பயத்துல வேர்த்து கொட்டிருக்கு. என்னாச்சு சார், எதுக்கு வந்திருக்கீங்கன்னு பதற்றத்தோடேயே கேட்டுருக்காங்க. புருஷனோட இறுதிச்சடங்குக்கு பணம் கொடுக்க மாட்டேங்குறீங்கன்னு கம்ப்ளைண்ட் வந்திருக்கு, ஹரிநாத் அக்கவுண்ட்ல இருந்த பணமெல்லாம் எங்கப்போச்சுன்னு கேட்ருக்காங்க. ஆனா, போலீஸ் ரெண்டு கேள்வி கேட்டதுமே பயத்துலயும் பதற்றத்துலயும் தானாவே எல்லாத்தையும் உளறியிருக்காங்க மனைவி ஸ்ரீருதிலயா. தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் பகுதிய சேந்த ஹரிநாத் - ஸ்ரீருதிலயா தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்காங்க. இந்த சூழல, ஸ்ரீருதிலயாவுக்கு அதே கிராமத்த சேந்த கௌஷி-ங்குற இளைஞரோட பழக்கம் ஏற்பட்டிருக்குது. ரெண்டு பேரும் அடிக்கடி வீட்டுல தனிமையில சந்திச்சிருந்துருக்காங்க. இப்படியே ரெண்டு பேரும் ஹரிநாத்துக்கு தெரியாம தனிமையில இருந்துருக்காங்க. அப்படி ஒருநாள் கெளஷி கூட வீட்டுல தனிமையில இருந்தப்ப, திடீர்னு வேலைக்கு போயிருந்த ஹரிநாத் உடல்நிலை சரியில்லாததால வீட்டுக்கு வந்திருக்காரு. அப்போ, வீட்டுக்குள்ள அரை குறை ஆடையோட மனைவியும் கெளஷியும் தனியா இருந்தத பாத்து டென்ஷன் ஆன ஹரிநாத், கத்தி சண்ட போட்டு மனைவிய அடிக்க பாஞ்சிருக்காரு. அப்ப, என்ன மன்னிச்சிருக்கங்க, தெரியாம பண்ணிட்டேன்னு சொல்லி, ஹரிநாத்தோட கால்ல விழுந்துருக்காங்க ஸ்ரீருதிலயா. மனைவியோட கண்ணீர பாத்ததும் ஹரிநாத் ஒரு நிமிஷம் ஆத்திரத்த குறச்சிக்கிட்டு அப்படியே நின்னுருக்காரு. இதான் சான்ஸ்னு நினச்ச ஸ்ரீருதிலயா, கால்ல விழுந்து கதறுற மாதிரி நடிச்சு, அப்படியே கணவனோட கால வாரி கீழ இழுத்துப் போட்டுருக்காங்க. ஸ்ரீருதிலயா, ஹரிநாத்தோட கால இறுக்கமாக பிடிக்க, கெளஷி ஹரிநாத்தோட கழுத்த நெரிச்சு கொன்னுருக்கான்.அதுக்கப்புறம், ஸ்ரீருதிலயா, கெளஷி ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்கு பின்னாடி உள்ள ஸ்லாப் கொக்கியில ஹரிநாத்தோட உடல தூக்குல தொங்கவிட்டு தற்கொலை மாதிரி செட்டப் பண்ணிருக்காங்க. விசாரணைக்கு அப்புறம் ஸ்ரீருதிலயாவ அரெஸ்ட் பண்ண காவல்துறையினர், தலைமறைவா இருக்குற கெளஷிய தேடிட்டு இருக்காங்க.