பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து மொத்தம் 22 ஆயிரத்து 797 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினசரி இயக்கப்படும் 12 ஆயிரத்து 552 பேருந்துகளுடன் 10 ஆயிரத்து 245 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு, ஜனவரி 9ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை அவை இயக்கப்படும். கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்ப ஜனவரி 16 முதல் ஜனவரி 19 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கலின் போது, சென்னையில் இருந்து 11 லட்சத்து 35 ஆயிரம் பேர் சொந்த ஊருக்குச் செல்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.