இந்த 2025 யாருக்கு எப்படியோ, ஆனா Stranger Things Fansக்கு ஒரு முக்கியமான வருஷம்னு தான் சொல்லனும். ஏன்னா, 2016ல் இருந்து இந்த Stranger Things சீரீஸ் நம்ம வாழ்க்கையோட ஒரு அங்கமா பயணிச்சிட்டு இருக்கு. கடைசியா, இந்த சீரீஸோட சீசன் 4, கடந்த 2022ல வெளியானதுலேருந்து எப்போ இதோட Final Season வரும்னு இருந்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கிற விதமா இந்த Stranger Things ஓட Final Season ஆன 5வது சீசனோட 1st volume, Netflixல வெளியாகி மிகப்பெரிய வரவேற்ப கொடுத்துட்டு இருக்கு. அடுத்ததா Volume 2 வர டிசம்பர் 26ம் தேதியும், Final Episode New Year அன்னிக்கும் வெளியாகயிருக்கு. இந்த நிலைல தான் இந்த Stranger Things ஓட எல்லா Episodes ஓட Running time எவ்ளோன்ற விவரம் அதிகாரப்பூர்வமா வெளியாகிருக்கு. அத பாக்குறதுக்கு முன்னாடி Stranger Things, Netflix ல வெளியான ஒரு வெப் சீரீஸ். இது Duffer Brothersனு சொல்லப்படுற Matt Duffer மற்றும் Ross Duffer இவங்க ரெண்டு பேரால உருவாக்கப்பட்டது. இந்த Stranger Things 1980களில் இண்டியானால இருக்குற ஹாக்கின்ஸ் நகரத்துல அமைக்கப்பட்ட ஒரு அறிவியல் கற்பனை கதை. அந்த நகரத்துல வசிக்கிற வில் பையர்ஸ் காணாமப் போறது, அந்த பையன அவனோட நண்பர்கள், அதே ஹாக்கின்ஸ்ல உள்ள Lab லேருந்து தப்பிச்ச லெவன்னு அழைக்கப்படுற சூப்பர் பவர் இருக்குற பொண்ணோட சேந்து கண்டுபுடிக்குறதல ஆரம்பிச்சு அடுத்தடுத்து நடக்குற திருப்பங்கள வச்சி கத நகருது. இப்போ இந்த சீரீஸோட Season 5க்கான Running time வெளியாகிருக்கு. அந்த வகைல இந்த Final Season ல மொத்தம் 8 Episode இருக்கு. இறுதியா New Year அன்னிக்கி வெளியாகயிருக்குற Final Episode Chapter 8: The Rightside Up – 2 மணிநேரம் 8 நிமிஷம்னு அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்பட்ருக்கு.கடைசியா வெளியான 1st volume ஓட Ending யாருமே எதிர்பாக்காத வகைல இருந்துச்சு. அதே தான்.. திடீர்னு Will-க்கு சூப்பர் பவர் கெடச்சு Mike, Robin, Joyce எல்லாரையும் Demogorgons டேருந்து காப்பாத்துனாரு. அடுத்து என்ன நடக்கும்ன்றத பொறுத்துருந்து தான் பாக்கணும்.