பொங்கல் பண்டிகை முடிந்து, சொந்த ஊரில் இருந்து ஜனவரி 17ஆம் தேதி, சென்னை திரும்புவதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில், அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்புவோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. 17ஆம் தேதிக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட ரயில்களில் டிக்கெட் முழுமையாக விற்று தீர்ந்தன.இதையும் பாருங்கள் - சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் | Sabarimala | CrowdUpdate | TempleNews