நடிகை ஸ்ருதிஹாசன் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் ‘டிரெயின்’ திரைப்படத்தின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'டிரெயின்' படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் , நரேன் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளார்.