ராணுவத்திடம் உள்ள இலங்கை தமிழர் நிலங்கள் விரைவில் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அநுரகுமார திசாநாயக உறுதி அளித்துள்ளார். அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட பின் முதல் முறையாக அநுரகுமார திசாநாயக யாழ்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.