சென்னையில் பல்வேறு பகுதிகளில் மக்களை தெருநாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் சம்பவங்கள் அரங்கேறும் நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 1 லட்சத்து 81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த முறை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது இருந்ததைவிட, தற்போதைய கணக்கெடுப்பில் தெருநாய்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கு மேல் அதிகரித்திருப்பது சென்னைவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.