Also Watch
Read this
By: Manigandan Raja
நியூஸ் தமிழின் 5ஆவது நாள் தேர்தல் பயணத்தின் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்டம், தூய நெஞ்சக் கல்லூரியில் (Sacred Heart College) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தேர்தல் குறித்த தங்களது பார்வையை பகிர்ந்து கொண்டதோடு, அரசியல் தலைவர்களை நோக்கி கேள்விகளையும் எழுப்பினர்.


அரசியல் தலைவர்களை நோக்கி கேள்விகளை எழுப்பிய மாணவர்கள்
தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமின்றி நைஜீரியா, ஜாம்பியா (Zambia) மாணவர்களும், தமிழ்நாட்டு தேர்தல் மற்றும் அரசியல் குறித்து தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தினர். தமிழ்நாட்டு தலைவர்களை தெரியுமா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜயின் பெயரை குறிப்பிட்டு வெளிநாட்டு மாணவர்கள் பதிலளித்தனர்.


நைஜீரியா, ஜாம்பியா மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்பு
தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்களுக்கு கொடுப்பதை போலவே தங்களுக்கும் லேப்டாப் வழங்கவேண்டும் என வெளிநாட்டு மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். மருத்துவம், கல்வியை விடுத்து தேவையில்லாத பொருட்களை இலவசமாக வழங்குவது ஏன் மாணவர் ஒருவர் கேள்வியை முன் வைத்தார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved