சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு திரும்ப முடியாமல் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோரை மீட்டு அழைத்து வர, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தம்மிடம் உதவி கேட்டிருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சுனிதா வில்லியம்சையும், வில்மோரையும் முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் நீண்ட காலமாக விண்வெளியில் தவிக்க விட்டு விட்டதாகவும், அது மிகவும் கொடூரமானது எனவும் தெரிவித்துள்ளார். இருவரையும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக மீட்டு அழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.