சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "ஜெயிலர்-2" திரைப்படத்தின் அறிமுக வீடியோ இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் குறித்த 4 நிமிட அறிமுக வீடியோவை வெளியிட முடிவு செய்துள்ள நிலையில், இந்த வீடியோவுக்கான சென்சார் போர்டு சான்றிதழையும் தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.